தங்கம் விலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது: நடிகை ஆண்ட்ரியா

பிரபல நடிகையும், பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, தங்கம் விலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நேற்று (நவ.15) ஒரு நகைக்கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், "எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் கோயம்புத்தூர். ஆண்டுக்கு பத்து முறை இங்கு நான் வருவேன். தங்க நகைகள் என்றாலே அனைவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். தற்போது தங்கத்தின் விலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி