டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்குப் பல்வேறு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்தின் மீதான வெளிப்படையான தாக்குதல் என இந்திய பிரஸ் கிளப், டெல்லி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் இந்திய மகளிர் பத்திரிகையாளர் அமைப்பு ஆகியவை கூட்டறிக்கை வாயிலாகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.