ஐபிஎல் வரலாற்றில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை நெருங்கிய ஜாஸ் பட்லர்

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய குஜராத் வீரர் ஜாஸ் பட்லர், பவர்ப்ளேயில் 5 சிக்ஸர்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த 'தொடக்க வீரர் அல்லாத' வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 6 சிக்ஸர்கள் அடித்ததே இப்பட்டியலில் தற்போதுவரை முதலிடமாக நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி