தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நாகேந்திரனை இன்று (பிப்., 21) அவரது நெல்லை இல்லத்தில் வைத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். ஜான்பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.