இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு புதிய இடத்தைப் பிடித்துள்ளார்.