ரூ.10 கோடி வசூலித்த ரியோ ராஜ் படம் - குஷியில் ரசிகர்கள்

அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான 'ஆண்பாவம் பொல்லதாது' திரைப்படம், தற்போது தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் வெற்றி, ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் கூட்டணியின் தொடர்ச்சியான வெற்றியாகக் கருதப்படுகிறது. மேலும், படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து பல திரையரங்குகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி