தமிழக அரசின் ‘நான் முதல்வன் திட்டம்’ மூலமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு அரசு உதவி வருகிறது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி 25,888 பாலிடெக்னிக் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர் ஓலா எலெக்ட்ரிக், அக்செஞ்சர், அமேசான், அசோக் லேலண்ட், போஸ்க், டெய்கின், HCL, L&T உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர்.