ராமநாதபுரம் மாவட்டத்தில், முதலாளி வீட்டில் நகைகள் திருடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரது வீட்டில் ஹலிமத் நிஸ்மியா என்ற பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பெண், வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். இதுகுறித்து முகமது போலீசில் புகார் அளித்த நிலையில், முகமது தங்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக ட்விஸ்ட் கொடுத்தனர். இந்நிலையில், திருடப்பட்ட நகைகளைப் போட்டு ரீல்ஸ் வெளியிட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.