இயற்கை உபாதை கழிக்கச் சென்றவரிடம் நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மணப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (52). இவர் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்கும்போது, கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சோலைமலை மற்றும் சரவணன் ஆகியோர் அவரிடம் பேச்சுக் கொடுத்து, கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்றனர். இதில் முத்துக்குமார் செயினைப் பிடித்துக் கொண்டதால், 1¼ பவுன் மதிப்புள்ள செயினின் ஒரு பகுதி கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி