ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே எஸ்.கொடிக்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானதாகக் கூறி, 4 கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளித்தனர். உரிய காலத்தில் கடன் தொகையைச் செலுத்தியும் நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை என்றும், வங்கி செயலாளர் சிவபிரபு மோசடியில் ஈடுபட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், நகைகள் மீட்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.