ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தேசிய தேர்வு முகமை (NTA) ஜேஇஇ மெயின் (JEE Main) 2026 இரண்டாம் அமர்வு முடிவுகளை நாளை (ஏப். 20) வெளியிடத் தயாராகி வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைச் சரிபார்க்கலாம். இரண்டாம் அமர்வு தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 8 வரை நடைபெற்றது. தாள் 2 (B.Arch/B.Planning) முடிவுகள் மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕