நாடு முழுவதும் ஜேஇஇ முதல் கட்ட முதன்மை தேர்வுகள் இன்று (ஜன.21) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு அசல் அடையாள அட்டை, கூடுதல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வெளிப்படையான பேனா மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.