ஜெயலலிதாவின் சகோதரர் என்.ஜே.வாசுதேவன் காலமானார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே.வாசுதேவன் (92), வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், கர்நாடகாவின் மைசூருவில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவர் பன்னூர் நகரம், சாமனஹள்ளியில் உள்ள தனது வளர்ப்பு மகளின் வீட்டில் உயிரிழந்தார். வாசுதேவன், ஜெயலலிதாவின் அண்ணன் ஆவார். ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோது அவரை வாசுதேவன் சந்திக்க முயன்றும் முடியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா காலமானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி