இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ் நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம், நிதி நெருக்கடி தொடர்பான நீதிமன்ற தடைகள் காரணமாக வெளியாவதில் தாமதமானது. இந்நிலையில், அந்த தடைகள் நீங்கியதை அடுத்து, வரும் ஜன.14-ம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் பொங்கல் ரேசிலிருந்து விலகிய நிலையில், அந்த இடத்தை நிரப்ப 'வா வாத்தியார்' படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.