ஜனநாயகன் விவகாரம்.. இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானதாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி