நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்., 30ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜன., 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சனையில் சிக்கியது. இது தொடர்பாக பட நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே ஏப்., 30 வரை ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் ஏப்ரலில் நடைபெறவுள்ள சூழலில், வாக்குப்பதிவு முடியும் வரை படம் வெளியாகாது என தெரிகிறது.