முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், படத்தொகுப்பாளர் உமாசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உமாசங்கரை சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.