'கமல் 237' படத்திற்கு இசையமைக்கும் ஜேக்ஸ் பிஜாய்

சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'கமல் 237' படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்வதாகவும் ஷெமீர் கே.எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் கடைசியாக வெளியான லோகா படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி