அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோவை இன்று (பிப்.4) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வர்த்தகம் மற்றும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, உலகளாவிய விநியோக சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதங்களை நடத்தினர்.