ரயில் பயணங்களின்போது புகைபிடித்தால் அல்லது மது அருந்தினால் ரூ.500 அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) எச்சரித்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இத்தகைய செயல்களை கண்டால் '139' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.