ஜெகபர் அலி உடலை தோண்டி எடுக்க உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி உடலை தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜெகபர் அலி  படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை திருமயம் தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், "உடலை தோண்டியெடுக்கும்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது. ஊடகங்கள், வேறு யாருக்கும் அனுமதி தரக் கூடாது. போதிய காவல்துறை பாதுகாப்புடன் அவரது உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்" என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி