CSK வீரர் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்குச் சென்றது குறித்து அந்த அணியின் உரிமையாளர் மனோஜ் படலே விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “4 வாரங்களுக்கு முன்பு ஜடேஜா என்னை தொடர்பு கொண்டு, மீண்டும் தனது முதல் வீட்டிற்கு (RR) திரும்ப வருவது குறித்து யோசித்து வருவதாக கூறினார். அதன்பிறகு தான் அனைத்துமே தொடங்கியது. கடைசியாக 21 வயது இளம் வீரராக பார்த்தேன், தற்போது மீண்டும் அனுபவம் மிக்க இளம் வீரராக அவரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.