"CSK வெற்றிக்கு பாடுப்பட்டவர் ஜடேஜா” - CEO உருக்கம்

ஜடேஜாவை டிரேட் செய்தது கடினமாக இருந்ததாக சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “CSKவின் வெற்றிக்குப் பல வருடங்களாக பாடுப்பட்டவர் ஜடேஜா. வீரர்களின் ஒப்புதலுடன் இந்த கடினமான முடிவை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். ஐபிஎல் 19ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. மேலும், வீரர்களின் மினி ஏலம் டிச.16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், ஆல்-ரவுண்டர்களான ஜடேஜாவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு CSK விட்டுக்கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி