2019-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களை திரும்ப கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. அன்று ஒரு கிராம் ரூ.3,738-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.15,009-யாக விலை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு சுமார் ரூ.11,271 லாபம் கிடைக்கிறது. 302 சதவீத லாபத்துடன், கூடுதல் வட்டியும் சேர்வதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ.4 லட்சத்திற்கும் மேல் பெற வாய்ப்புள்ளது.