திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஐயூஎம்எல் கட்சியுடன் இன்று (பிப்., 22) தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோருடன் திமுக மூத்த அமைச்சர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். ஐயூஎம்எல் 5 தொகுதிகள் கேட்டதாகவும், 4 தொகுதிகளாவது தர வேண்டும் என வலியுறுத்தியதாகவும் காதர் மொகிதீன் தெரிவித்தார். ஆனால் 2 தொகுதிகள் தரவே திமுக முன் வருவதாக கூறியுள்ளனர். இக்கட்சி கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பித்தக்கது.
நன்றி: News18