தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் (IUML) இடம்பெறுவதை அடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்தித்தனர். பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் நாளை காலை அமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்குச் சிறுபான்மையினர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பில் அபுபக்கர், நவாஸ்கனி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி: பாலிமர்