தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், http://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055612, 9499055642 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.