பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று (செப்.17) இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது X தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "எனது நண்பர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், அவர் ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ள மெலோனி, இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான ஆழமான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும் பதிவிட்டுள்ளார். இருநாடுகளின் வளர்ச்சி மற்றும் கூட்டுறவை இணைந்து கட்டியெழுப்புவோம் என்றும் மெலோனி தனது வாழ்த்து பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕