அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்து இன்று (நவ.07) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னது பாஜகதான். பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்குமாறு பாஜகவே அறிவுறுத்தியது. கட்சியில் இருந்து பிரிந்தவர்களை பார்க்க முடியும் என்பதால் பசும்பொன் சென்றேன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைக்கப்பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும்" என கூறினார்.
நன்றி: புதிய தலைமுறை