ஏதோ கட்சியை தொடங்கினோம் என்று வரவில்லை - முதல்வர்

திமுக சாதாரணமாக ஆட்சிக்கு வரவில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் இன்று (நவ.08) திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்று வரும் 'திமுக 75 அறிவு திருவிழா'வில் பேசிய அவர், "ஏதோ கட்சியை தொடங்கினோம் அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை. எத்தனை போராட்டம், எத்தனை துரோகம், எத்தனை தியாகம். திமுகவின் உழைப்பு சாதாரணமானது அல்ல. திமுகவைப் போல வெற்றி பெற வேண்டும் என்றால் திமுகவைப் போல உழைக்க வேண்டும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி