இந்திய அணியின் சிறப்பான பவுலர் பும்ராவை சமாளிப்பது கடினம் இல்லை என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “2026 T20 உலக கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும். ஆனால் இதனை தடுக்க, அணியின் திறமையான வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தியை வீழ்த்த எதிரணிகள் திட்டம் தீட்டி வருகின்றனர். இதுவரை பும்ராவை சமாளிப்பதுதான் கடினமாக இருந்த நிலையில், தற்போது அதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டனர். இதனால் பும்ரா அவர்களுக்கு பிரச்னையாக இருக்கமாட்டார்” என்றார்.