விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ரவி மோகனுக்கு ஆதரவாக நடிகை மீரா சோப்ரா (நிலா) தனது 'X' தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா நேரங்களிலும் ஆண்களே தவறு செய்பவர்கள் அல்ல என்றும், பெண்களுக்கு சாதகமாக உள்ள சட்டங்களை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பிரச்னையிலும் ஆணின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ரவி மோகனுக்கு விரைவில் நீதியும் உண்மையும் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.