"பயணிகள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை"

குஜராத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணிகள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அகமதாபாத் நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆணையர் ஜி.எஸ். மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "குடியிருப்புப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால், சில உள்ளூர்வாசிகளும் இறந்திருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். 230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உட்பட 242 மனித உயிர்கள் தீயில் கருகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் நாட்டையே உலுக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி