போர் விமானங்களை இந்தியா இழந்தது உண்மைதான்!

பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்தது உண்மைதான் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரில் Bloomberg TV-க்கு அவர் அளித்த பேட்டியில், “விமானங்கள் ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் நடந்தன என்பதே முக்கியம், எண்கள் முக்கியமில்லை. எங்களின் தவறை புரிந்துகொண்டு சரிசெய்தோம்" என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர், எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது என்பதைக் குறிப்பிடவில்லை.

தொடர்புடைய செய்தி