தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதே சரியானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யிடம் பெற்ற கடிதம் குறித்து நாளை மாலை அறிவிப்போம். விஜய்க்கு ஆதரவா இல்லையா என்பது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். விஜய்க்கு தற்போது 108 தவெக மற்றும் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.