இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் (101) உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லகண்ணு உடல்நிலை பற்றி சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதனை நம்ப வேண்டாம் என்றும் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.