ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைகிறது. மேலும், நோய் நுண்மங்கள் தொற்று உண்டாகும் விகிதமும் குறையும். உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடியும். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கும் நல்லது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.