ரூ.2,500 வழங்குவது கடினம்.. ரூ.1,000 வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும் என புதிதாக அமைய உள்ள அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும். மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் தவெகவின் திட்டம் கடினம். தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 திட்டத்தையாவது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மகளிருக்கு ரூ.2,500 தொகை வழங்கப்படும் என தவெக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி