தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோயில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை. கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ் மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. முருகனே தமிழ் தான், முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை” என்றார்.