சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகி செங்கோட்டையன் இன்று (பிப்.22) செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர். அவர் யாரை விரல் நீட்டுகிறாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டை தவெக தலைவர் விஜய்தான் ஆள்வார், இதை எவராலும் தடுக்க முடியாது. வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணியளவிலே விஜய் தான் முதலமைச்சர் என்ற செய்தி வெளியாகும்” என்றார்.
நன்றி: NewsTamilTV24x7