சொகுசு வாழ்க்கைக்காக பூட்டிய வீடுகளில் திருடிய ஐடி ஊழியர் மகேஷ் ரெட்டி (27) என்பவரை ஆந்திர போலீசார் விசாகப்பட்டினத்தில் கைது செய்தனர். 60க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியுள்ள இவர்மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யும்போது 699 கிராம் தங்க நகை, 3.8 கிலோ வெள்ளி பொருட்கள், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்ட ரூ.15.63 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.