தமிழகத்திலேயே முதன்முறையாக சேலம் மாவட்டம் கொண்டப்படநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ISO தரச் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் முறை, மாணவர்களுக்கான தரமான கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தரச் சான்று வழங்கும் நிறுவனம் பள்ளியை பாராட்டியுள்ளது. இந்த அங்கீகாரம் அரசுப் பள்ளிக் கல்விக்கு புதிய பெருமையைச் சேர்த்துள்ளது.