ஆந்தரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உடன் எல்விஎம்-3 ராக்கெட் இன்று (நவ.2) ஏவப்பட்டது. இந்நிலையில், "இஸ்ரோ மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது” என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் கூறியுள்ளார். மேலும், “இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பிற்கு இந்த சாதனை சிறந்த உதாரணம். வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் சி.எம்.எஸ்-03 நிலை நிறுத்தப்பட்டது. இஸ்ரோ குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்" என்றார்.