இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை

காசாவுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற "குளோபல் சுமூத் புளோட்டிலா" கப்பல் குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கடலில் வைத்து கைது செய்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-நோல் பரோட் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி