ஈரான் உடனான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தும், லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இன்று (ஏப்.8) இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதகளில் சிக்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 722 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது.