இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி, கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருகிறது. மேலும், இந்த தாக்குதல் காரணமாக ஈரானில் மக்கள் 80 பேரும், இஸ்ரேலிய மக்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த தாக்குதலை நிறுத்தக்கோரி இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
நன்றி: The Times of Israel