இஸ்ரேல் இன்று நடத்திய 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 300க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.