சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 18) நடைபெற்ற IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய இஷான் கிஷன், போட்டிக்கு பிறகு சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி 'விசில் போடு' சைகை செய்ததோடு, சமூக வலைதளத்திலும் கிண்டலாக பதிவிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.