தமிழ்நாட்டில் தொடங்கிய ஈஷா கிராமோத்சவம்!

சத்குருவின் ஈஷா அமைப்பு சார்பில் கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் 18-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ முதற்கட்டப் போட்டிகள் தமிழ்நாட்டில் இன்று தொடங்கின. இப்போட்டிகளில் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் அதிகமான கிராம மக்கள் பங்கேற்கின்றனர். வெற்றியாளர்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி