அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா, இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை தன்னை அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து மனுவை நிராகரித்துள்ளது.
நன்றி: தமிழ் ஜனம்